ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கே.ஜி.எஃப். ஹீரோ யாஷ் உடன் இணையும் விஜய் பட நடிகை

கே.ஜி.எஃப். ஹீரோ யாஷ் உடன் இணையும் விஜய் பட நடிகை

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

Pooja hegde Yash Movie : முப்தி மாஸ்ஸான படம் என்பதால் யாஷ் நடிக்கவுள்ள அவரது 19வது படமும் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கே.ஜி.எஃப். ஹீரோ யாஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக பூஜா ஹெக்டே மாறியுள்ளார். தமிழில் விஜய், தெலுங்கில் ராம்சரண், பிரபாஸ், அல்லு அர்ஜுன் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பூஜா.

  இவர் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி வரை வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

  இதையும் படிங்க - பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை… அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை

  இந்த நிலையில் கே.ஜி.எஃப். ஹீரோ யாஷ் உடன் அடுத்த படத்தில் பூஜா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி படத்தை இயக்கிய நாரதன் இயக்கவுள்ளதாக கன்னட திரையுலகில் பேசப்படுகிறது.

  இந்த படத்தைத்தான் தற்போது தமிழில் சிம்பு ஹீரோவாக நடிக்க பத்து தல என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள். கன்னட பதிப்பில் சிவராஜ் குமார் டான் கேரக்டரில் நடித்ததை தமிழில் சிம்பு நடிக்கிறார்.

  முப்தி மாஸ்ஸான படம் என்பதால் யாஷ் நடிக்கவுள்ள அவரது 19வது படமும் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரது நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப். 2 திரைப்படம் உலகளவி சுமார் 1300 கோடி வரை வசூலித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க - கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  பூஜா ஹெக்டே தற்போது இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் மற்றும் சல்மான் கானுடன் ஒரு படம் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார். இதில் சல்மான் கானுடன் நடிக்கும் படம், தமிழில் அஜித் நடிப்பில் மெகா ஹிட்டான வீரம் படத்துடைய ரீமேக்.

  Published by:Musthak
  First published:

  Tags: Pooja Hegde