ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்

பூஜா ஹெக்டே கால் காயம்

பூஜா ஹெக்டே கால் காயம்

சல்மான் கானுடன் அவர் இணைந்து நடித்து வரும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பின் போது, பூஜாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டேக்கு காலில் தசைநார் (ligament tear) கிழிந்ததாகத் தெரிகிறது. அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

  அதில் காயத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறால் பூஜாவின் இடது காலில் தசைநார் கிழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். காலில் கட்டுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்த பூஜா ஹெக்டே, "ஓகே லிகமென்ட் டியர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனெர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தந்தார்... விஜய்யுடனான சந்திப்பு குறித்து மனோபாலா பெருமிதம்!

  சல்மான் கானுடன் அவர் இணைந்து நடித்து வரும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பின் போது, பூஜாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்கும்படி அவரை டாக்டர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து 'சர்க்கஸ்' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார் பூஜா. அதோடு த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'SSMB28' என்று பெயரிடப்பட்டுள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Pooja Hegde