Home /News /entertainment /

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் விஜய் பட ஹீரோயின்… எத்தனை கோடி தெரியுமா?

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் விஜய் பட ஹீரோயின்… எத்தனை கோடி தெரியுமா?

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

Pooja Hegde : அஜித் நடிப்பில் உருவான வீரம் திரைப்படம் இந்தியில் கபி ஈத் கபி தீவாளி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சல்மான் கான் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் பட்டியலில் பூஜா ஹெக்டே முதலிடத்தை பிடித்துள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட பூஜா, பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். முதன்முறையாக பூஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மிஷ்கின்.

அவரது இயக்கத்தில் 2012-ல் வெளிவந்த முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு போதுமான காட்சிகளும், பாடல்களும் இருந்தன. இருப்பினும் படம் வெற்றி பெறாததால் அடுத்த படங்கள் அவருக்கு கிடைக்காமல் போனது.

இதையும் படிங்க - விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த 2 நடிகர்கள்… சுவாரசிய தகவல்

பின்னர் 2014-ல் இருந்து 2021 வரையில் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வந்து மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். 2012-க்கு பின்னர் முதன்முறையாக 2021-ல் தமிழுக்கு வந்த பூஜா, விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார்.

இருவரும் இணைந்த அரபிக் குத்து பாடல் உலகளவில் ஹிட்டானது. படத்திலும், விஜய் – பூஜா ஹெக்டே ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததா ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இருப்பினும், பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதையும் படிங்க - ’டான்’ முதலில் எனக்கு தான் வந்தது... அந்த காட்சிக்காக படத்தை தவிர்த்தேன்: உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் பூஜா தற்போது தெலுங்கில் ஜனகன மன படத்தில் விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ரூ. 5 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய நடிகைகளிலேயே நயன்தாராவுக்குதான் ரூ. 4 கோடி என்ற அதிக சம்பளம் உள்ளதாக பேசப்படும் நிலையில் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் பூஜா ஹெக்டே.

அஜித் நடிப்பில் உருவான வீரம் திரைப்படம் இந்தியில் கபி ஈத் கபி தீவாளி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சல்மான் கான் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
Published by:Musthak
First published:

Tags: Pooja Hegde

அடுத்த செய்தி