• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Covid 19: பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று...

Covid 19: பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று...

பூஜா பேடி

பூஜா பேடி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பூஜா பேடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    பாலிவுட் நடிகை பூஜா பேடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பூஜா பேடி தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “'எனக்கு மட்டும் எப்படி கொரோனா வரவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் ஒரு வழியாக எனக்கும் கொரோனா வந்துவிட்டது. 2 நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருந்தது.

    நான் ஏதோ அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். அதன் பிறகு பரிசோதனை செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது தெரிய வந்தது. தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன். எனக்கு மட்டும் அல்ல, என் வருங்கால கணவர், எங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

    நான் என் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைதான் நம்பியிருக்கிறேன். நான் தடுப்பூசி போடுவது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன். இயற்கையான முறையில் குணமடைய விரும்புகிறேன். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by POOJA BEDI (@poojabediofficial)






    தடுப்பூசிகள் வெளிவருவதற்கு முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99 சதவிகித பேர் மீண்டுள்ளனர். அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட 99 சதவிகித பேரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார்கள். எனவே எச்சரிக்கையுடன் இருப்போம். பயப்பட வேண்டாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: