நடிகை பார்வதி நாயர் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதாகவும் கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் கொடுத்திருந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது முன்னாள் உதவியாளர் புதுக்கோட்டை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உதயநிதி நடித்த நிமிர் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் மற்ற மொழி படங்களிலும் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 20 ம் தேதி, தனது உதவியாளரான புதுகோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றதாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாருக்கு மறுப்பு புகார் அளித்த அவரது முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸ் தன்னை நடிகை பார்வதி நாயர் அவமதித்து அடித்து இழிவுபடுத்தியதாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
திருட்டு புகார் குறித்து விசாரித்த நுங்கம்பாக்கம் போலீசார் நடிகை பார்வதி நாயர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவரது முன்னாள் உதவியாளர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர்.
வலை வலையாய் ட்ரெஸ்.. நடிகை தமன்னாவின் இன்ஸ்டா லேட்டஸ்ட் படங்கள்..!
இந்த நிலையில், தனது உதவியாளராக இருந்த சுபாஷ் சந்திர போஸ் தனது புகைப்படங்களையும் செல்போனில் பேசியவற்றையும் வெளியிட்டு மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் மேலும் ஒரு புகாரை கொடுத்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி சுபாஷ் சந்திர போஸ் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
மாடர்ன் ட்ரெஸில் மிருணாள் தாகூரின் கலக்கல் போட்டோஷூட்
கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை நுங்கம்பாக்கம் போலீசார் நடிகை பார்வதி நாயர் முன்னாள் உதவியாளரான சுபாஷ் சந்திர போஸை இரண்டாவது வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.