ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vairamuthu: வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது - நடிகை பார்வதி எதிர்ப்பு

Vairamuthu: வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது - நடிகை பார்வதி எதிர்ப்பு

பார்வதி - வைரமுத்து

பார்வதி - வைரமுத்து

”பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கவிஞர் வைரமுத்து ஓ.என்.வி விருது பெறுவதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓ.என்.வி விருதுக்கு தேர்வாகியுள்ள கவிஞர் வைரமுத்துவை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல, கேரளத்தின் புகழ்மிகு ஓஎன்வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது வழங்குவதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “"ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்துவின் மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி, “திரு. வைரமுத்து, ஓ.என்.வி கலாச்சார அகாடமியால் வழங்கப்படும் ஐந்தாவது ஓ.என்.வி இலக்கிய விருதைப் பெறுகிறார். ஆஹா. மறைந்த திரு ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்.” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vairamuthu