முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் கோலிவுட்டில் பார்வதி?! ரஞ்சித் - விக்ரம் இணைந்த படத்தில் கைகோக்கும் முக்கிய நடிகர்கள்!

மீண்டும் கோலிவுட்டில் பார்வதி?! ரஞ்சித் - விக்ரம் இணைந்த படத்தில் கைகோக்கும் முக்கிய நடிகர்கள்!

ரஞ்சித், விக்ரம், பார்வதி

ரஞ்சித், விக்ரம், பார்வதி

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஞ்சித் - விக்ரம் இணைந்த படத்தில் நடிகை பார்வதி மற்றும் நடிகர் பசுபதி ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நேற்று முதல் கடப்பாவில் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த திரைப்படம் கோலார் தங்க வயலின் வரலாற்றை மையப்படுத்தி  உருவாக்கப்படுகிறது.  எனவே, அதற்கு ஏற்ற வகையில் படப்பிடிப்பு தளத்தையும், பகுதியையும் தயார் செய்துள்ளனர்.

நேற்று தொடங்கிய முதல் கட்டப்  படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக நடிகர் விக்ரம் தன்னை தயார்படுத்தி வந்தார்.

Also read... "தேர்தலில் போட்டியா?" கேள்வி கேட்டதும் படாரன பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

இதையடுத்து கடந்த வாரம் சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஞ்சித் - விக்ரம் இணைந்த இந்தப் படத்தில் நடிகை பார்வதி மற்றும் நடிகர் பசுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram, Actress Parvathy, Pa. ranjith