முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரசிகர்களின் வரவேற்பை பெறும் ஓவியா – யோகி பாபுவின் ‘பூமர் அங்கிள்’ ஃபர்ஸ்ட் லுக் …

ரசிகர்களின் வரவேற்பை பெறும் ஓவியா – யோகி பாபுவின் ‘பூமர் அங்கிள்’ ஃபர்ஸ்ட் லுக் …

பூமர் அங்கிள் படததில் ஓவியா.

பூமர் அங்கிள் படததில் ஓவியா.

Boomer Uncle : சுவதீஸ் இயக்கத்தில், அங்கா மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார், சுரேஷ் தண்டபாணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஓவியா – யோகி பாபு நடிக்கும் பூமர் அங்கிள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகையாக தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தவர் ஓவியா. பிக்பாஸில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ஓவியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இருப்பினும் நிதானமாக தனக்கு ஏற்ற படங்களை ஓவியா தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம்வரும் யோகி பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க - ‘பா. ரஞ்சித் படத்தில் மீண்டும் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை’ – துஷாரா விஜயன்

இந்த படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என்று முதலில் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இது ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவின் கேரக்டர் பெயராகும். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.

சமீபத்தில் கான்ட்ராக்டர் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் தற்போது கான்ட்ராக்டர் நேசமணி என்ற பெயரிலிருந்து பூமர் அங்கிள் என்று படக்குழுவினர் பெயரை மாற்றியுள்ளனர்.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஓவியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வொண்டர் வுமன் காஸ்டியூமில் ஓவியா இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க - குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றதாக கும்கி பட நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோவில் கைது

கையில் துப்பாக்கியுடன் இன்னொரு போஸ்டரில் யோகிபாபு காட்சியளிக்கிறார். சுவதீஸ் இயக்கத்தில், அங்கா மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார், சுரேஷ் தண்டபாணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Actor Yogibabu, Actress Oviya