• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Oviya: கொல்லப்பட்ட நாய் புரூனோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை ஓவியா

Oviya: கொல்லப்பட்ட நாய் புரூனோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை ஓவியா

ஓவியா

ஓவியா

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஜஸ்டிஸ் ஃபார் புரூனோ ஹேஷ்டேக்ட் ரெண்டிங்கானது.

  • Share this:
    விலங்குகள் மீதான மனிதர்களின் வன்முறை ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருவனந்தபுரம் கடற்கரையில் மூன்று இளைஞர்கள் ஒரு நாயை அடித்துக் கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விலங்குகள் மீதான வன்முறை தண்டிக்கப்பட வேண்டும் என்று ஓவியா குரல் கொடுத்துள்ளார்.

    நாயை அடித்து கொல்வது, குரங்கை மாடி மீதிருந்து தூக்கி வீசுவது, யானையின் மீது டயரைக் கொளுத்தி எறிவது என்று நாடெங்கும் விலங்குகள் மீதான வன்முறை நடந்து வருகிறது. வட இந்தியாவில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் கட்டி தொங்கவிட்டு சுற்றி நின்று அடித்த வீடியோ வைரலான நிலையில், அதேபோல் இன்னொரு செயல். இது நாயின் மீது. திருவனந்தபுரத்தில் நடந்தது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புரூனோ என்ற கறுப்புநிற நாய் தினம் கடற்கரைக்கு வருமாம். அன்றும் கடற்கரைக்கு வந்த அது ஒரு படகில் படுத்துக் கிடந்திருக்கிறது. அதனை மூன்று இளைஞர்கள் தடியால் அடித்து, உயிரோடு இருக்கும் போதே இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு, சுற்றி நின்று அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஜஸ்டிஸ் ஃபார் புரூனோ ஹேஷ்டேக்ட் ரெண்டிங்கானது.

    நாயை அடித்துக் கொன்ற மூவரும் 17-லிருந்து 21 வயதுக்குள்ளான இளைஞர்கள். இவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. நடிகை ஓவியாவும், விலங்குகளுக்கு எதிரான வன்முறை தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: