Oviya: ’என்னையும் கைது செய்யுங்கள்’ நடிகை ஓவியா ட்வீட்

ஓவியா - மோடி

#ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.

  • Share this:
    டெல்லியில் பிரதமர் மோட்டிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கில் நடிகை ஓவியா எதிர்ப்பு குரலை எழுப்பியிருக்கிறார்.

    நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.



    இதையடுத்து #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோட்டிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: