Home /News /entertainment /

என்ன ஹேர்ஸ்டைல் இது... ரசிகருக்கு ஓவியா நெத்தியடி பதில்!

என்ன ஹேர்ஸ்டைல் இது... ரசிகருக்கு ஓவியா நெத்தியடி பதில்!

ஓவியா

ஓவியா

ஹேர்ஸ்டைல் குறித்த ரசிகரின் கேள்விக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ஓவியா, தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான இவருக்கு சமூக வலைதளங்களில் ஆர்மி பக்கங்களை உருவாக்கினர் அவரது தீவிர ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஓவியா நடிப்பில் வெளியான 90 எம்.எல், களவாணி 2 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ஓவியாவை அதிக அளவிலான ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் ஹேர்ஸ்டைல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஓவியா, நான் என்னுடைய மூளை வளர வேண்டும் என்று முயற்சிக்கிறேன். முடி வளர வேண்டும் என்றில்லை. என்னுடைய முடி, நிறம், பாலினம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. என்னுடைய விருப்பங்கள் தான் எனது சுதந்திரமாக கருதுகிறேன். நாம் எல்லோருமே அழகு தான்” என்று கூறியுள்ளார்.



மேலும் ஒரு ரசிகர், இந்த ஹேர்ஸ்டைலில் ஒரு கடை திறப்பு விழா செய்யமுடியுமா ? அதற்கு கூப்பிடுவார்களா என்று ட்வீட் செய்ய, என்னுடைய ரசிகர்கள் தலைவராக வேண்டும் என்று விரும்புகிறேன். கவலைப்பட வேண்டாம் நான் விக் வைத்திருக்கிறேன்” என்று ஓவியா பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க: மகள் மீதான புர்கா குறித்த சர்ச்சை - முதல்முறையாக வாய்திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

 
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress Oviya

அடுத்த செய்தி