Home /News /entertainment /

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் கல்வி குறித்த பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் - நடிகை ஓவியா

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் கல்வி குறித்த பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் - நடிகை ஓவியா

நடிகை ஓவியா

நடிகை ஓவியா

Actress Oviya: தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை நடிகைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும்  நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்களை தடுக்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் கல்வி குறித்த பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஓவியா கலந்து கொண்டார். அப்பொழுது அவருக்கு  பிறந்தநாள் என்று தெரிந்தவுடன் மாணவ-மாணவிகள் கேக் ஏற்பாடு செய்து ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.



அதனைத் தொடர்ந்து மேடையில் ஊ சொல்றியா, ஓ சாமி உள்ளிட்ட பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி கொண்டாடினார். நடிகை ஓவியாவின் குத்தாட்டத்தை பார்த்த கல்லூரி மாணவ-மாணவிகள் விசிலடித்து கைதட்டி கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஓவியா பேசுகையில், தமிழக மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களின் ஆதரவு தான் தற்போது நான் இந்த பெரிய நிலையை அடைந்துள்ளேன். பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பொழுது ஆன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.



பெண்கள் தான் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். வீட்டில் இருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது. கலாச்சாரம் என்று கூறி மூடி வைக்காதீர்கள், மறைக்காதீர்கள், வெளிப்படையாக பேச வேண்டும். அவ்வாறு பேசும்போதுதான் அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. நாளைய நாட்களை நினைத்து வாழ்வதைவிட இன்றைய நாளை நினைத்து சந்தோஷப்பட வேண்டும் என்றார். நான் அட்வைஸ் பண்ண வில்லை என்றும் தெரிவித்தார்.

Also read... திராவிடர்களாக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: பா.ரஞ்சித் பேட்டி

தொடர்ந்து பேசிய ஓவியா தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையை நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கூட சம உரிமை இல்லை பெண்களுக்கு என்பது கவலையளிக்கின்றது. பெண்களுக்கு கல்வியை வழங்க வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஆண், பெண் என எல்லாக் குழந்தைகளுக்கும் சிறுவயதில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றார்.

 
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Oviya, Salem

அடுத்த செய்தி