ஆரவ்வுடன் லிவிங் டுகெதரா? ஓப்பனாக பதிலளித்த ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம் என்றார் ஓவியா.

news18
Updated: January 3, 2019, 5:08 PM IST
ஆரவ்வுடன் லிவிங் டுகெதரா? ஓப்பனாக பதிலளித்த ஓவியா!
ஆரவ்வுடன் ஓவியா
news18
Updated: January 3, 2019, 5:08 PM IST
ஆரவ்வுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருவதாக பரவிய வதந்திக்கு நடிகை ஓவியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார். எனினும், ஆரவ் அவரது காதலை மறுக்கவே,  தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றார் ஓவியா. இதையடுத்து அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற ஆரவ் இறுதிவரை சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் ஆரவ் - ஓவியா தங்களது சமூகவலைதள பக்கங்களில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த  புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். ஒரே இடத்துக்கு இருவரும் சென்று வருவது, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது என சமூகவலைதளத்தில் பேசுபொருளாக இருந்த ஆரவ் - ஓவியா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து ஓவியா பேட்டியொன்றில் கூறியுள்ளதாவது: ராஜ பீமா படத்தில் ஆரவ்வுடன் இணைந்து நடிக்கிறேன். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நானும் ஆரவ்வும் நடனமாடியுள்ள பாடலை ஆரவ்தான் பாடியிருக்கிறார். என்னைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடலாக அமைந்துள்ளது. ஓவியா ஆர்மி, பிக்பாஸ் குயின் இப்படிப் பல வார்த்தைகள் பாடல் வரிகளாக அமைந்துள்ளன.பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. நிறைய சண்டைகள் நடந்தன. ஆனால் இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம். நானும் ஆரவ்வும் திருமணம் முடித்துவிட்டோம், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன. அவை அனைத்தும் பொய்.அப்படி எதுவும் திட்டமிருந்தால் நாங்களே சொல்வோம். ஆரவ் எனது நண்பர். எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்கு திருமணத்தில் நம்பிக்கை கிடையாது. அது வேண்டாமென்று நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று எனக்கு தெரியாது.

நான் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் எனக்கு திருமணம்  எந்தவிதத்தில் செட் ஆகும் என்று தெரியவில்லை. ஒருவரின் துணை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இதுவரையும் இல்லை என்று ஓவியா கூறியுள்ளார்.

இருதரப்பு மோதலால் சிக்கல் - அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா? - வீடியோ

First published: January 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...