நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். அவருக்காக ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர் ஆரவ்வுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அந்த நிகழ்ச்சியில் ஆரவ்வை ஓவியா காதலித்த நிலையில், ஆரவ் காதலிக்க மறுத்தாக பரபரப்பாக பேசப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டில் 90எம்எல், கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவானி 2 போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. இதில் காஞ்சனா 3 படம் மட்டும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆரவ்வின் ராஜ பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் ஓவியா. ஆனால் அந்தப்படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. மேலும் பூமர் அங்க்கிள் என்ற படத்தில் அவர் நடித்துவருகிறார். இந்த நிலையில் ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஓவியா பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருக்க ஒருவர் அவர் அருகில் வந்து முத்தமிடுகிறார். அதற்கு ஓவியா வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
View this post on Instagram
இதனையடுத்து இவர் தான் ஓவியாவின் காதலரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். ஆனால் ஓவியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Oviya, Instagram, Love