ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாலையில் பிச்சையெடுக்கும் சக்திமான் நடிகை! ஷாக்கான பாலிவுட்!

சாலையில் பிச்சையெடுக்கும் சக்திமான் நடிகை! ஷாக்கான பாலிவுட்!

நுபுர் அலங்கார்

நுபுர் அலங்கார்

நுபுர் தான் பிச்சை எடுக்கும் வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தி நடிகை நுபுர் அலங்கார் சாலையில் பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

  27 வருடங்களாக இந்தி சினிமாவில் இருந்து வருபவர் நுபுர் அலங்கர். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். மிகவும் புகழ்பெற்ற நாடகமான சக்திமான் சீரியலிலும் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். சாவரியா, சோனாலி கேபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் கணவரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். சினிமாவில் தனக்கென முத்திரையை பதித்து வந்த நுபுர் திடீரென காவி உடை அணிந்து இனி சன்னியாசியாக மாறப்போவதாக தெரிவித்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Nupur Alankaar (@nupuralankar)  அதன்படி சினிமாவை விட்டும் விலகினார். வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி துறவு மேற்கொள்ள உள்ளேன். இனி சினிமாவிலும் நடிக்கப்போவதில்லை என்று திரையுலகத்தை அதிர வைத்தார். இந்நிலையில் கையில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி சாலையில் பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

  Also Read: ஃப்ளையிங் கிஸ்! மழையில் டான்ஸ் - வேற லெவல் குஷியில் ஜிபி முத்து! கலகல பிக்பாஸ் ப்ரோமோ!

  தன்னுடைய தினம் தினம் வாழ்க்கை முறையை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நுபுர் தான் பிச்சை எடுக்கும் வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் அவர் சிலரிடன் பிச்சை எடுக்கிறார். மேலும் தான் ஒருநாளைக்கு 11 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டுமென்றும், தன்னுடைய பிச்சை தட்டைக் காட்டி இதுதான் முதல் பிச்சை என்றும் கூறுகிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Nupur Alankaar (@nupuralankar)  தன்னுடைய இந்த திடீர் முடிவு குறித்து பேசியுள்ள நுபுர், சில காலமாக என் குடும்பத்தில் பல பிரச்னைகள். அந்த நேரத்தில் என்குருவை சந்தித்தேன். அவருடைய ஆலோசனையின் படியே சன்னியாசத்தை நான் மேற்கொண்டேன். பிச்சை எடுப்பதால் கிடைக்கும் பணம் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது என்றார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actress, Trending