Nivetha Thomas: கொரோனா கண்டறியப்பட்ட ஒரு வாரத்தில் தியேட்டருக்கு சென்ற நிவேதா தாமஸ்

Nivetha Thomas: கொரோனா கண்டறியப்பட்ட ஒரு வாரத்தில் தியேட்டருக்கு சென்ற நிவேதா தாமஸ்

நடிகை நிவேதா தாமஸ்

கொரோனா கண்டறியப்பட்ட ஒரு வாரத்தில், நடிகை நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்ற விஷயம் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா கண்டறியப்பட்ட ஒரு வாரத்தில், நடிகை நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்ற விஷயம் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

    ஏப்ரல் 3 ஆம் தேதி, நடிகை நிவேதா தாமஸ், கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். பின்னர் சரியாக ஒரு வாரம் கழித்து, அதாவது ஏப்ரல் 10-ம் தேதி அவர் தியேட்டரில் தான் நடித்த ‘வக்கீல் சாப்’ படத்தைப் பார்த்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் எப்படி தியேட்டருக்கு செல்லலாம் என சமூக வலைதளங்களில் நிவேதா தாமஸிடம் கேள்வி எழுப்பினர்.

    சோஷியல் மீடியாவில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் அவர் கொடிய கொரோனா வைரஸிலிருந்து மீண்டிருக்கலாம் எனக் கருதினாலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் அவரது செயல்களால் கலக்கம் அடைந்ததாகத் தெரிகிறது. இந்தி திரைப்படமான 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'வக்கீல் சாப்' படத்தைப் பார்க்க தான் நிவேதா தாமஸ் திரையரங்கத்திற்கு சென்றிருந்தார். பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    தியேட்டரில் எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்ட நிவேதா, ‘இந்த தருணங்களுக்காக தான் வாழ்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த போதிலும் அவர் செய்த செயலுக்காக ட்ரோல் செய்யத் தொடங்கியபோது, இளம் நடிகை தான் வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்ததாகவும், அதனால் தான் தியேட்டருக்குச் சென்றதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இல்லையெனில் ஒரு திரையரங்கிற்குச் சென்று மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் அளவுக்கு தான் பொறுப்பற்றவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.

    COVID-19 ஆல் பாதிக்கப்பட்டபோது செய்ததைப் போலவே, எதிர்மறையையும் சோதித்த பின்பும் சமூக வலைதளத்தில் நிவேதா தாமஸ் பதிவிட்டிருந்தால், எல்லா குழப்பங்களையும் தவிர்த்திருக்க முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: