மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஃபோட்டோ... சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜின் பேஸ்புக் பதிவிலேயே ரசிகர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

Web Desk | news18
Updated: March 20, 2019, 9:29 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஃபோட்டோ... சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்
Web Desk | news18
Updated: March 20, 2019, 9:29 PM IST
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நடிகை நிவேதா பெத்துராஜ் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனை எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரக்கூடிய பக்தர்கள் தங்களுடைய மொபைல் போனை பாதுகாப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 கட்டணத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வரக்கூடிய பக்தர்கள் செல்போன் கொண்டு வந்தால் தீவிர சோதனை செய்து அவர்களிடம் போலீஸார் கறார் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட நடித்த பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் பொற்றாமரைக்குளம் மற்றும் சிறப்பான தோள்களில் அமர்ந்து போட்டோக்களும், கோவில் உள்ளே உள்ள வளையல் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோக்களையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மொபைல் போன் கொண்டு செல்வதற்கான நீதிமன்ற தடை அமலில் இருக்கும் நிலையில் நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிவேதா பெத்துராஜின் பேஸ்புக் பதிவிலேயே ரசிகர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால் நிவேதா பெத்துராஜ் தரப்பில் எந்தவித விளக்கமும் இல்லை. 

அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு - வீடியோ

First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...