Home /News /entertainment /

Nithya Menen: முன்னணி மலையாள நடிகருடனான திருமணம் குறித்த வதந்திகளை மறுத்த நித்யா மேனன்!

Nithya Menen: முன்னணி மலையாள நடிகருடனான திருமணம் குறித்த வதந்திகளை மறுத்த நித்யா மேனன்!

நித்யா மேனன்

நித்யா மேனன்

சமூக வலைதளங்களில் பரவும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று மறுத்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

    திருமணம் குறித்த வதந்திகளை நடிகை நித்யா மேனன் மறுத்துள்ளார். 

    இறுதியாக ’மார்டன் லவ் ஹைதராபாத்’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்த நடிகை நித்யா மேனன், முன்னணி மலையாள நடிகரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பரவின. இந்த செய்தியை முதன் முதலில் தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், மலையாள முன்னணி ஊடகமான மனோரமாவிடம் பேசிய நித்யா மேனன், தனது திருமணம் குறித்த வதந்திகளை மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்றும், ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை போடுவதற்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    படத்தை விமர்சனம் செய்ய 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை மாறன்... ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

    "சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார் நித்யா மேனன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருமணத்திற்கு செலவழித்ததை திரும்ப தரக்கோரி நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நோட்டீஸ்?

    அதோடு தான் படங்களில் பிஸியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோருடன் இணைந்து 19 (1)(A) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் டீசரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செவ்வாயன்று வெளியிட்டது. இதனை அறிமுக இயக்குனர் இந்து வி இயக்குகிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nithya menon

    அடுத்த செய்தி