Home /News /entertainment /

திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்து பங்கேற்ற நித்யா மேனன்

திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்து பங்கேற்ற நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன்

மாரி படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளது.

    தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு, நடிகை நித்யா மேனன் வீல்சேரில் வந்து பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று, வைரலாகி வருகிறது.

    கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், மாறன் படங்கள் தியேட்டர் ரிலீஸை தவிர்த்து ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கர்ணன் படத்திற்கு பின்னர் திரையரங்கில் வெளியாக உள்ளது.

    இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திருச்சிற்றம்பலம் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ராஷி கன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஓடிடியில் ரிலீஸாகும் அமலா பால் தயாரித்து நடித்திருக்கும் ’கடாவர்’..

    அவர்களுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். மாரி படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளது.



    படத்தின் அனைத்து பணிகள் நிறைவுற்ற நிலையில், திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியின்போது நடிகை நித்யாமேனன் வீல் சேரில் வந்து கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடிப்படியிலிருந்து அவர் சமீபத்தில் தவறி விழுந்ததால் அவருடைய கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    மல்டி ஸ்டார் திரைப்படங்களில் நிச்சயம் நடிப்பேன் - அதர்வா

    இதையடுத்து கடந்த சில நாட்களாக வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நித்யாமேனன் நடந்து வந்தார். தன்னுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், தன்னால் எடையைச் சுமக்க முடிவதாகவும் சமீபத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை நித்யாமேனன் வீல் சேரில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது
    Published by:Musthak
    First published:

    Tags: Nithya menon

    அடுத்த செய்தி