முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகை நிக்கி கல்ரானி வீட்டில் பொருட்களை திருடிச்சென்ற பணியாளர்... போலீசார் நடவடிக்கை

நடிகை நிக்கி கல்ரானி வீட்டில் பொருட்களை திருடிச்சென்ற பணியாளர்... போலீசார் நடவடிக்கை

பணியாளர் தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி புகாரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணியாளர் தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி புகாரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணியாளர் தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி புகாரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனது வீட்டில் பணிபுரிந்த இளைஞர் விலை உயர்ந்த கேமரா மற்றும் தனது ஆடைகளைத் திருடிச் சென்றதாக நடிகை நிக்கி கல்ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரகத நாணயம், மொட்டசிவா கெட்டசிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிக்கி கல்ரானி. இவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த கேமரா மற்றும் நிக்கி கல்ராணியின் ஆடைகளைத் திருடிச் சென்ற அவரது வீட்டில் வேலை செய்து வந்த தனுஷ்(19) என்ற இளைஞர் திருடிச் சென்றதாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Also Read : Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிக்கிகல்ராணி வீட்டில் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டிலிருந்து கேமரா மற்றும் அவரது ஆடைகளை இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து நிக்கிகல்ராணி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தனுஷ் என்ற நபர் திருப்பூரில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

Also Read : Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

நிக்கி கல்ராணியின் கேமரா மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் தனுஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி புகாரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Nikki Galrani