’இரவு’க்கு அழைத்த துபாய் இளைஞரை தோலுரித்துக் காட்டிய நடிகை

தொலைபேசியில் தன்னை தவறாக அணுகிய நபரை பிரபல நடிகை ஒருவர் தோலுரித்துக்காட்டியுள்ளார்.

’இரவு’க்கு அழைத்த துபாய் இளைஞரை தோலுரித்துக் காட்டிய நடிகை
நடிகை நேஹா சக்‌ஷேனா
  • News18
  • Last Updated: November 24, 2018, 1:11 PM IST
  • Share this:
தொலைபேசியில் தன்னை தவறாக அணுகிய நபரை பிரபல நடிகை ஒருவர் தோலுரித்துக்காட்டியுள்ளார்.

தமிழில் நீ என்ன மாயம் செய்தாய், ஒரு மெல்லிய கோடு, லொடுக்கு பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நேஹா சக்‌ஷேனா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவரிடம் துபாயில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் தன்னுடன் ஒருநாள் இரவை கழிக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த மெசேஜை பார்த்த அவர் அந்த நபர் பயன்படுத்தும் சமூகவலைதள பக்கங்களை கண்டுபிடித்துள்ளார்.


பின்னர் அந்த நபரின் பெயர் எல்சன் என்று கண்டுபிடித்த நடிகை, அவரது ஊர் , இருப்பிடம், பணி செய்யும் இடம் என அனைத்தையும் கண்டுபிடித்து அந்த நபரின் முழு விபரங்களையும் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்த தனது ஃபேஸ்புக் பதிவில், இதுபோன்ற நாய்க்கு பாடம் புகட்டவும், பெண்களிடம் இவர் நடந்து கொள்ளும்விதத்தை அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த விஷயத்தை தான் தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஒரு சினிமா பிரபலமாக இருந்துகொண்டு இதைக்கூடதான் செய்யவில்லை என்றால் ஒரு சாதாரண பெண்ணுக்கு நான் எப்படி முன்மாதிரியாக இருக்கமுடியும் என்று கூறியுள்ள நேஹா, சமூகத்தில் இதுபோன்ற நபர்களை அடையாளப்படுத்தினால்தான் இன்னொரு நிர்பயா பாதிக்கப்படமாட்டார் என்றும் கூறியுள்ளார்.தன்னை தவறாக அணுகிய நபரை நடிகை தோலுரித்துக்காட்டிய சம்பவம் அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது என்றபோதிலும் இந்த விவகாரத்தில் தன்னுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக எல்சன் கூறியுள்ளார்.

கஜா புயலின் தாக்கத்தால் களையிழந்த கால்நடை சந்தை - வீடியோ

First published: November 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading