Home /News /entertainment /

மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க இளவரசி வந்தாள்... சந்தோஷத்தில் சீரியல் பிரபலம்!

மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க இளவரசி வந்தாள்... சந்தோஷத்தில் சீரியல் பிரபலம்!

நீலிமா ராணி

நீலிமா ராணி

Neelima Rani: இரண்டாவது குழந்தைக்காக காத்திருந்த நீலிமாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கிறது.

    சின்னத்திரை நடிகை நீலிமா ராணி தனக்கு குழந்தை பிறந்திருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

    சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

    விஜய் டிவி-யின் அரண்மனைகிளி சீரியலில் நடித்து வந்த நீலிமா ராணி, தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீலிமா ராணிக்கும் அவரது கணவர் இசை வாணனுக்கும் 12 வயது வித்தியாசமாம். காதலை முதலில் வெளிப்படுத்திய நீலிமா, இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அதிதி மகளும் இருக்கிறார்.

    இந்நிலையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கும் விஷயத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் நீலிமா ராணி. இதைத் தொசர்ந்து தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.



     




    View this post on Instagram





     

    A post shared by Neelima Esai (@neelimaesai)






    இரண்டாவது குழந்தைக்காக காத்திருந்த நீலிமாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து அவர் ஜனவரி 5-ம் தேதி தனக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நீலிமா ராணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி