ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அந்தரத்தில் அசத்தலாக ஸ்கை டைவிங் செய்து ஆச்சரியப்பட வைத்த நஸ்ரியா நசீம்

அந்தரத்தில் அசத்தலாக ஸ்கை டைவிங் செய்து ஆச்சரியப்பட வைத்த நஸ்ரியா நசீம்

நடிகை  நஸ்ரியா ஸ்கை டைவிங் செய்த வீடியோ

நடிகை  நஸ்ரியா ஸ்கை டைவிங் செய்த வீடியோ

Nazriya Nazim | தற்போது நஸ்ரியா துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அப்பொழுது ஸ்கை டைவிங் செய்து இருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நடிகை  நஸ்ரியா துபாய்க்கு சுற்றுலா சென்றபொழுது ஸ்கை டைவிங் செய்துள்ளார்.  ஸ்கை டைவிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் இதனை வியந்து பாராட்டி வருகின்றனர்.

  குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமானவர் தான் நடிகை  நஸ்ரியா. 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி செம்ம ஓப்பனிங் கொடுத்தார். நஸ்ரியாவின் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.அதையடுத்து ராஜா ராணி, நையாண்டி என தொடர்ந்து படங்களில் நடித்தார். பின்னர் வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகியப் படங்களில் நடித்தார்.

  பின்பு 2018 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அன்வர் ரஷீத் இயக்கிய டிரான்ஸ் படத்தில் கணவர் ஃபஹத் பாசிலுடன் ஜோடியாக  நஸ்ரியா நடித்திருந்தார். இந்தப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Cinema, Nazriya nazim