நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இப்போது அவர்கள் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.
இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடக்கிறது. அங்கு திருமணத்துக்காக பிரமாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்துள்ளனர்.
மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Must Read : நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்..
இந்நிலையில், திருமண நிகழ்ச்சியை படம்பிடிக்க நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் உரிமம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.