நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்டாலும் நயன்தாராவுக்கு தமிழ் நாட்டிலேயே ரசிகர்கள் அதிகம். தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இவர் நடித்த கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு ஆகிய அனைத்து படங்களுமே ஹிட் படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடிப்பார். அந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடிப்பதால் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
திரைப்படங்கள் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்த நயன் காதல் வாழ்க்கையிலும் பிசியானார். ஆம்.இவர் நடித்த 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறினார். இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வார்கள். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வரும் இந்த காதல் ஜோடியின் திருமணம் எப்போது என்பது தான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.
இருவரும் ஒன்றாக இணைந்து சமீபத்தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றொரு தொழிலையும் தொடங்கியுள்ளார்.
தோல் மருத்துவரான ரெனிடா ராஜனுடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கியுள்ளார். இதற்கு ‘தி லிப் பாம் கம்பெனி’என்ற பெயரை வைத்துள்ளார் .பெயரிலேயே லிப் பாம் இருப்பதால் இது முழுக்க முழுக்க லிப் பாமிற்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நிறுவனம் என்பது தெரிகிறது.
இந்த கம்பெனியை பற்றி விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களின் புதிய முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.