ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திகிலூட்டும் காட்சிகளுடன்வெளியானது நயன்தாராவின் கனெக்ட் படடீசர்…

திகிலூட்டும் காட்சிகளுடன்வெளியானது நயன்தாராவின் கனெக்ட் படடீசர்…

கனெக்ட் படத்தில் நயன்தாரா

கனெக்ட் படத்தில் நயன்தாரா

டீசரை தன்னுடைய twitter பகுதியில் பகிர்ந்த நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் (Connect) திரைப்படம் இடைவேளை இல்லாமல் 95 நிமிடம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். அந்த படத்தை மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சாரவணன் இயக்கியுள்ளார்.

இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.  அதுவும் படத்தை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடுகின்றனர்.  இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு கனெக்ட் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

ரிலீஸ் செய்த ‘அண்ணாத்த’ படத்தை இன்னும் பார்க்கவில்லை…’ – வசூலை விமர்சித்து உதயநிதி ஓபன் டாக்…

மேலும் அந்த திரைப்படம் 95 நிமிடம் மட்டுமே ஓடும் வகையில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும், எனவே படத்தில் இடைவேளை இல்லை எனவும் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் தமிழ் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Kalaga Thalaivan Review: எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

நயன்தாரா - அஸ்வின் சரவணன் கூட்டணியில் வெளியான மாயா திரைப்படம் போல, இந்த கனெக்ட் திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தின் டீசரை தன்னுடைய twitter பகுதியில் பகிர்ந்த நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

' isDesktop="true" id="840019" youtubeid="X8npxGmbXfQ" category="cinema">

டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிரட்டலாக உள்ளதென ரசிகர்கள் கூறியுள்ளனர். கனெக்ட் படத்தை டிசம்பர் 22ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் தயாராகி வரும் நிலையில், அதே நாளில் விஷால் நடித்துள்ள லத்தி படமும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Nayanthara