Nayanthara | வடிவேலு பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா?

நயன்தாரா

வடிவேலு நடிப்பில் எலி படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படம் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

  • Share this:
    நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்துக் கொண்டே, நாயகி மையப் படங்களிலும் நடிக்கிறார். தீபாவளிக்கு ரஜினியுடன் அவர் நடித்த அண்ணாத்த வெளியாகிறது. அதற்கு முன் அவர் கண் தெரியாதவராக நடித்துள்ள நெற்றிக்கண் வெளியாக உள்ளது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்கிறார்கள். இதுவொரு நாயகி மையப் படமாகும்.

    தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் ஒன்பது வருடங்களுக்கு முன் கோபிசந்துடன் அவர் நடித்து வெளிவராமல் இருக்கும் தெலுங்கு திரைப்படமும் இந்த வருடம் வெளியாக உள்ளது.

    Also Read : லகான் படத்தில் ஆரம்பித்த காதல் பயணம்... அமீர் கான் - கிரண் ராவ் லவ் ஸ்டோரி

    இவை தவிர, மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் மலையாள லூசிபரின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் நயன்தாராவை கேட்டிருக்கிறார்கள். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த வேடம் இது. வில்லனின் மனைவியாக டீன்ஏஜ் பெண்ணிற்கு அம்மாவாக நடிக்க வேண்டும். எனவே நயன்தாரா இதில் நடிக்க வாய்ப்பு குறைவு. இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் படத்திலும் நயன்தாராவின் பெயர் அடிபடுகிறது.

    Also Read : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து திடிரென வெளியேறிய வனிதா!

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தமிழில் மேலுமொரு படத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன் ராஜாவின் சந்தோஷ் சுப்பிரமணியம், சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படங்களில் உதவி இயக்குனராக இருந்து போட்டா போட்டி படத்தின் மூலம் இயக்குனரானவர் யுவராஜ் தயாளன். வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி படங்களையும் இவர்தான் இயக்கினார். இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம்.
    Published by:Vijay R
    First published: