பொழுதுபோக்கு

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம் - படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள, மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியன்று ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம் - படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ள ’மூக்குத்தி அம்மன்’
  • Share this:
நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள, மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியன்று ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பண்பலை தொகுப்பாளர் பாலாஜி இயக்கியுள்ளார்.

ஏற்கனவே நாயகிகளை மையப்படுத்தி வெளியான ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், வரலட்சுமி சரத்குமார் நடித்த டேனி உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



அம்மன் சமகாலத்தில் உலகிற்கு வந்தால் என்னவாகும் என்ற வித்தியாசமான கோணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக இது உருவாகியுள்ளது. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கின் காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில், தீபாவளியன்று ஹாட்ஸ்டார் வலைதளத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading