Home /News /entertainment /

புதிய படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாற்றம்

புதிய படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாற்றம்

நயன்தாரா - ஷ்ரத்தா

நயன்தாரா - ஷ்ரத்தா

இப்படத்தை வடிவேலுவின் ‘எலி’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கவுள்ளார். விதார்த் மற்றும் ஸ்ரீ முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புதிய படமொன்றில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரதா ஸ்ரீநாத் மாற்றப்பட்டுள்ளார்.

    சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 'அண்ணாத்தே' தீபாவளிக்கு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளது. அந்தத் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவனின் புதிய படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

    இதற்கிடையே எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படத்தில் இருந்து நயன்தாரா விலகியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படத்தை வடிவேலுவின் ‘எலி’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கவுள்ளார். விதார்த் மற்றும் ஸ்ரீ முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இதற்கிடையே போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன், ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதால் அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போயிருக்கிறது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். அதனால் பெயரிடப்படாத ட்ரீம் வாரியரின் படத்திற்கு நயன்தாராவால் தேதி ஒதுக்க முடியவில்லையாம். ஆகையால் அவருக்குப் பதிலாக 'விக்ரம் வேதா' மற்றும் 'மாறா' உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறாராம். இருப்பினும் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்துடன் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நயன். இது 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara

    அடுத்த செய்தி