Nayanthara: அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்த நயன்தாரா

Nayanthara: அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்த நயன்தாரா

நடிகை நயன்தாரா

ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஹைதராபாத் சென்றார்.

  • Share this:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து உடல் நலம் தேறிய பின்னர் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று நடிகை நயன்தாராவும் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார்.



இதனிடையே சமீபத்தில் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: