ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணத்திற்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் நயன்தாரா… விரைவில் ஷாரூக்கான் படத்தில் இணைகிறார்

திருமணத்திற்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் நயன்தாரா… விரைவில் ஷாரூக்கான் படத்தில் இணைகிறார்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Actress Nayanthara : தெலுங்கில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் காட் ஃபாதர் படத்திலும் முக்கிய கேரக்டரில் இடம் பெறுகிறார் நயன்தாரா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளார்.

  தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நயன்தாராவிற்கும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு திருப்பதி சென்று தரிசனம் செய்த  நட்சத்திர ஜோடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

  அதன்பின் உடல்நல குறைவு காரணமாக தன் திருமணத்திற்கு வர முடியாமல் போனதால்  தந்தையை, கணவருடன் கேரளாவிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார் நயன்தாரா.  மேலும் கேரள பகுதியில் உள்ள பிரபல கோவில்களுக்கும் விக்னேஷ் சிவன் -  நயன்தாரா ஜோடியினர் சென்று தரிசனம் செய்தனர்.

  இதையும் படிங்க - சுருள் முடியில் சொக்க வைக்கும் ரித்திகா சிங்..

  இந்த நிலையில் நயன்தாரா மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ளார்.  குறிப்பாக நேற்று சிக்கன் தொடர்பான இணையதள விளம்பரத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டார்.

  அதேபோல் வரும் 25 ஆம் தேதி முதல் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்க உள்ளார். அதற்கான படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளது.  அதற்காக அடுத்த வாரம் மும்பை செல்கிறார்.

  ஜவான் திரைப்படத்தின் நயன்தாராவின் சில  காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கும் காட்சிகளை மட்டும் தற்போது நடைபெற உள்ள படப்பிடிப்பில் எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டு இருக்கிறார்.

  இதனை தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் காட் ஃபாதர் படத்திலும் முக்கிய கேரக்டரில் இடம் பெறுகிறார் நயன்தாரா.

  இதையும் படிங்க - விக்ரம் படக்குழுவினரின் மேல் முத்த மழை பொழிந்த கமல்ஹாசன்..

  மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான  லூசிஃபர் படத்தின்  ரீமேக்தான் தெலுங்கில் காட் ஃபாதர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

  இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய கேரக்டரில் இடம்பெறுகிறார். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணனும், மூத்த இயக்குனருமான ஜெயம் ராஜா இயக்கி வருகிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Nayanthara