ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புதிய படங்களை தவிர்க்கும் நயன்தாரா… காரணம் இதுதானா?

புதிய படங்களை தவிர்க்கும் நயன்தாரா… காரணம் இதுதானா?

நயன்தாரா

நயன்தாரா

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்திலும், ஜெயம் ரவி நடிக்கும் படம் ஒன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா புதிய படங்களை தவிர்த்து வருகிறார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

    நடிகை நயன்தாராவும், விக்னேஷ் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் இருவரும் திருமணம் முடித்தனர்.

    இதன் பின்னர் ஐரோப்பா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தேனிலவுக்கு இந்த ஜோடி சென்றது. இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் நயன்தாரா தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.

    சமூக வலைதளங்களில் நயன்தாரா இல்லாத நிலையில், அவருக்கான கிரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அவரது நடிப்பில் வெளிவந்துள்ள காட்பாதர் என்ற தெலுங்கு படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல தொழிலதிபரின் மகன்…

    ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்திலும், ஜெயம் ரவி நடிக்கும் படம் ஒன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

    கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தின்ரிலீஸ் தேதி அறிவிப்பு…

    இந்நிலையில் நயன்தாரா விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகி வருவதாகவும், இதன் காரணமாகத்தான் புதிய படங்களில் அவர் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் பின்னர் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நயன்தாரா நடிப்பார் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. மேலும் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலமாக படங்களை தயாரிப்பதில் நயன்தாரா கூடுதல் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Nayanthara