முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுற்றுலா செல்லும் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்!

சுற்றுலா செல்லும் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

நட்சத்திர ஜோடிகள் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா. 10 நாட்கள் அங்கு தங்குகின்றனர். 

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை அருகில் நடைபெற்றது.  அதன் பின் தாய்லாந்து நாட்டிற்கு ஒரு வாரம் சுற்றுலா சென்ற தம்பதியினர் சென்னை திரும்பினர்.

அத்துடன் நயன்தாரா ஜவான்  திரைப்பட வேலைகளில் பிஸியானார்.  அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவன், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை இயக்கினார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்த நிலையில், தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு 10 நாட்கள் தங்குவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாராவிற்கு உடல்நிலை சரியில்லை என்று நேற்று தகவல் வெளியானது. ஆனால் அதை நயன்தாரா தரப்பினர் மறுத்தனர்.

Also read... மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஸ்பெயின் நாட்டிற்கு இன்று காலை புறப்பட்டு உள்ளனர்.  அங்கு இருந்து சென்னை திரும்பியவுடன் நடிகை நயன்தாரா ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

அதே போல் விக்னேஷ் சிவன், தன்னுடைய இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தின் வேலையை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Nayanthara, Vignesh Shivan