நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. திருமணத்துக்காக பிரமாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்திருந்தனர். இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நயன்தாரவிற்கு தாலிகட்டியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நேற்று முன்தினம் மாலை மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த திருமணவிழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், அஜித் மனைவி ஷாலினி அவரது மகள், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவனை வாழ்த்தினர்.
இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
Also read... Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!
Also read... லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சூப்பர் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்!
குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என கூறியுள்ளனர். திருமண விழா உரிமையைப் பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படமோ அல்லது திருமண காட்சிகளோ வெளியாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.