பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா...!

பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா...!
  • Share this:
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ஆர்,ஜே பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு திடீரென நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தனர்.


சுமார் அரை மணி நேர தரிசனத்திற்கு பிறகு கோயிலில் இருந்து வெளியே வந்த நயன்தாரா, அங்கு திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ரசிகர்களுக்கு கையசைத்தபடி இருவரும் காரில் ஏறி சென்றனர்.

Also see...
First published: December 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்