ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது… இயக்குனர் யார் தெரியுமா?

நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது… இயக்குனர் யார் தெரியுமா?

நயன்தாரா

நயன்தாரா

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். இதில் நயன்தாரா இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நயன்தாரா நடிக்கவுள்ள அவரது 81-ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்த நாளையொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

  விக்னேஷ் சிவன் உடனான திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த காட் ஃபாதர் திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முக்கியமான கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார்.

  ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் அட்லியின் ஜவான் படத்திலும் நயன்தாரா இடம்பெற்றிருக்கிறார். இதற்கிடையே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது வாடகைத் தாய் இரட்டைக் குழந்தைகளை அறிவித்திருந்தனர்.

  இதுதொடர்பான சட்ட சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

  ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

  விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். இதில் நயன்தாரா இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படமான அவரது 81-ஆவது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  WATCH – கலகத் தலைவன் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ காட்சி…

  எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Nayanthara