• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை நந்திதாவின் அப்பா திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை நந்திதாவின் அப்பா திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

நந்திதா

நந்திதா

நந்திதா ஸ்வேதாவின் சமீபத்திய சமூக வலைதள பதிவு, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
    நடிகை நந்திதா ஸ்வேதா தனது தந்தை காலமான விஷயத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    அட்டகத்தி, எதிர்நீச்சல், புலி, தேவி 2 போன்ற பல படஙகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. ஒருபக்கம் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், மற்றொரு புறம் போட்டோ ஷுட்களை அதிகம் நடத்தி, அதன் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நந்திதா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போட்டு வருகிறார்.

    இந்நிலையில் நந்திதா ஸ்வேதாவின் சமீபத்திய சமூக வலைதள பதிவு, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது தந்தை சிவசாமி அவர்களின் மரணச் செய்தி தான் அது. 54 வயதில் மரணமடைந்த நந்திதாவின் அப்பா மரணம் அடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    நந்திதாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, சாந்தனு பாக்யராஜ், ஜனனி, சனம் ஷெட்டி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்கள் ஆறுதலை தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: