முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருப்பதி கோயிலுக்கு விசிட் அடித்த நமீதா! ரசிகர்களுடன் செல்ஃபி!

திருப்பதி கோயிலுக்கு விசிட் அடித்த நமீதா! ரசிகர்களுடன் செல்ஃபி!

மாதிரி படம்

மாதிரி படம்

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பிரபல திரைப்பட நடிகை நமீதா இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

சாமி கும்பிட்ட பின் அவர் ஏழுமலையான் கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார்.கோவில் வேதபட்டதனால் அவருக்கு வேத ஆசி வழங்கினர். நமீதாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா. 17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார். 2002ஆம் ஆண்டு 'சொந்தம்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா. அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.

Read More: கவனம் ஈர்க்கும் ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

நடிகை நமீதாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவையில்லை. மச்சான் என்ற வார்த்தையை தன்னுடைய டிரேட் மார்க்காக ஆக்கியவர். விஜய் டிவியில் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் நமீதா.  நடிப்பைக் கடந்து அரசியலிலும் பிஸியாக இருக்கிறார்.

நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டு திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார் நமீதா.

First published:

Tags: Actress Namitha