Home /News /entertainment /

முத்தத்திற்கு பயந்து கமலுடன் நடிக்க மறுத்த நதியா!

முத்தத்திற்கு பயந்து கமலுடன் நடிக்க மறுத்த நதியா!

நதியா

நதியா

நதியா தான் காதலித்தவரையே திருமணம் செய்து இரு மகள்களுடன் செட்டிலாகிவிட்டார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியியின் மூலம் அமைந்த அவரது இரண்டாவது வருகையும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.

நதியா 1984-ல் சினிமாவுக்கு வந்தபோது, கமல்ஹாசன் இந்திய அளவில் அறியப்படுகிற நடிகர். மூன்றாம் பிறைக்காக தேசியவிருது வாங்கியிருந்தார். ஒரே வருடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அவரது படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்திருந்தன. அவருடன் இணைந்து நடிக்க இந்தியாவிலுள்ள முன்னணி நடிகைகள் அனைவரும் தயாராக இருந்தனர். அந்த காலகட்டத்தில் கமலுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்த ஒரே ஒரு நடிகை நதியா.

நதியாவின் பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து கேரளாவின் தலசேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 1984-ல் பாசில் தனது, நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். ஷரீனா மொய்து என்ற அவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று அவருக்கு பெயர் வைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைபெற்றது.

நோக்கத்தா தூரத்து  கண்ணும் நட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மோகன்லால் அதில் நடித்திருந்தார். எனினும் அது நாயகியை சுற்றி வருகிற நாயகி மையத் திரைப்படம்.  அதனை தான் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் பாசில்  ரீமேக் செய்தார். 1985-ல் இந்த படம் வெளியாகும் முன்பே மலையாளத்தில் பல படங்களில் நதியா நடித்திருந்தார்.

அதற்கு அடுத்த வருடமே (1986) பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, நிலவே மலரே என வெற்றி படங்களாக நடித்தார். முதல் படத்திலேயே நதியா ஆண்களின் மனதில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் புகழ்பெற்றார். அவரது கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், புதிய ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பெண்கள் மத்தியில் பேசு பொருளானது.

நதியா புடவை, நதியா சுடிதார், நதியா ஹேர் ஸ்டைல், நதியா கொண்டை, நதியா ஹேர்கிளிப் என்று பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் நதியா பெயரில் வெளிவர ஆரம்பித்தன. நதியா பெண்களின் பிராண்ட் அம்பாசிடர் ஆனார். தமிழ் சினிமாவில் பெண்களிடையே உடைக்காகவும், ஸ்டைலுக்காகவும், தோற்றத்துக்காகவும் புகழபெற்ற முதல் நடிகை நதியா எனலாம்.
இப்படியொரு நடிகையை கமலுடன் ஜோடியாக நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் யாருக்கும் எழும். கமல் படத்தில் நடிக்க நதியாவுக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், கமலுடன் நடிக்க நதியா மறுத்தார். அப்போது அது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

Nadia refuses to act with Kamal for fear of kissing, actress nadia covid, actress nadhiya latest news, nadhiya daughter name nadiya age, jana nadhiya, nadhiya daughter instagram, shirish godbole wikipedia, nadhiya instagram, actress nadia moidu, nadhiya kamal haasan, nadia kamal haasan, நதியா, நடிகை நதியா, நதியா கமல் ஹாசன்

நதியா எப்படி கண்ணியமான நாயகிக்கு உதாரணமாக வளர்ந்து வந்தாரோ அதேபோல் கமல் காதல் இளவரசனாக புகழ்பெற்றிருந்தார். அவர் படத்தின் பாடல்காட்சிகளும், காதல் காட்சிகளும் அப்போதே பிரபலமடைந்திருந்தன. அவரைப் போல் திரையில் நெருங்கி உணர்வுப்பூர்வமாக நடிக்கக் கூடியவர்கள் இல்லை என்ற நிலை அப்போது இருந்தது. நதியாவிடம் கமல் படத்தில் நடிக்கக் கேட்ட காலகட்டத்தில்தான் (1986) கமலின் விக்ரம் படம் வெளிவந்தது. வனிதாமணி வனமோகினி பாடலில் கமலும், அம்பிகாவும் போட்ட ஆட்டமும், மீண்டும் மீண்டும் வா பாடலில் கமலும், டிம்பிள் கபாடியாவும் காட்டிய நெருக்கமும் இளசுகள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது.

Nadia refuses to act with Kamal for fear of kissing, actress nadia covid, actress nadhiya latest news, nadhiya daughter name nadiya age, jana nadhiya, nadhiya daughter instagram, shirish godbole wikipedia, nadhiya instagram, actress nadia moidu, nadhiya kamal haasan, nadia kamal haasan, நதியா, நடிகை நதியா, நதியா கமல் ஹாசன்

அதே வருடம் புன்னகை மன்னன் வெளியானது. படம் பார்த்தவர்கள் படத்தைவிட்டு விட்டு ரேகாவுக்கு கமல் கொடுத்த முத்தத்தையே வியந்து பேசிக் கொண்டார்கள். ஊடகங்களும் அந்த முத்தத்திற்கே முக்கியத்துவம் அளித்தன. கமல் தன்னுடன்  நடிப்பவர்களின் உதடுகளில் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் முத்தமிடுவார் என்பது போன்ற முத்தக் கதைகள் தினம் தினம் வந்து கொண்டிருந்தன. கமல் படம் என்றால் முத்தம் உறுதி என்ற நிலை இருந்ததால் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை நதியா உதறினார். முத்த பயமே இதற்கு காரணம். பிறகு அவர் அளித்த பேட்டியில், கமலுடன் நடிக்க முடியயாமல் போனது குறித்து வருத்தப்பட்டிருந்தார்.

முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் ஸ்ருதி ஹாசனை விடாத கொரோனா

அதேநேரம், முத்தத்தை சொல்லி நதியாவை நிஜமாகவே மிரட்டிய நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் மலையாள நடிகர் முகேஷ். ஷ்யாமா (1986) என்ற படத்தில் நதியாவும், முகேஷும் காதலர்கள். கார் விபத்தில் முகேஷ் இறந்து போக, நதியா மம்முட்டியை காதலிப்பார்.  முகேஷ் இயல்பாகவே நகைச்சுவை உணர்வுமிக்கவர். படப்பிடிப்புதளத்தில் அவர் அடிக்கும் ஜோக்குக்கு நதியா  விரைவிலேயே ரசிகையானார். படத்தின் நாயகி ஒருவரிடம் மட்டும் சிரித்து பேசுவது மற்றவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Nadia refuses to act with Kamal for fear of kissing, actress nadia covid, actress nadhiya latest news, nadhiya daughter name nadiya age, jana nadhiya, nadhiya daughter instagram, shirish godbole wikipedia, nadhiya instagram, actress nadia moidu, nadhiya kamal haasan, nadia kamal haasan, நதியா, நடிகை நதியா, நதியா கமல் ஹாசன்

ஒருநாள் நதியா அனைவரும் சுற்றியிருக்க, நீங்க தான் எனக்குப் பிடிச்ச ஜோக்கர் என்று சொல்ல, அனைவரும் சிரித்திருக்கிறார்கள். அதன் பிறகு முகேஷை பார்க்கும் போதெல்லாம் ஜோக்கர் என்று நதியா கலாய்த்திருக்கிறார்.  ஒருநாள் நதியாவிடம் முகேஷ், இனி ஜோக்கர்னு சொன்னா கிஸ் பண்ணிடுவேன் என்று மிரட்ட, நிஜமாகவே பண்ணிருவாரோ என்று அதன் பிறகு அவர் முகேஷிடம் வாயே திறக்கவில்லை. ஜோக்கர்னு கூப்பிடு என்று முகேஷ் வம்புக்கிழுத்தால் உதட்டை மூடிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவாராம் நதியா. இதனை நதியா கலந்து கொண்ட நிகழ்வில் முகேஷே குறிப்பிட்டார்.

எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

நதியா தான் காதலித்தவரையே திருமணம் செய்து இரு மகள்களுடன் செட்டிலாகிவிட்டார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியியின் மூலம் அமைந்த அவரது இரண்டாவது வருகையும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.  முத்தக்காட்சிகள் சகஜமாகிப்போன சினிமாவில் முத்தம் ஒரு முன்னணி நடிகையின் திரைவாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறது என்பது சவாரஸியம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி