மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில்‘த்ரிஷ்யம் 2’ உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
இந்த வரவேற்பால் த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டன. அதில் முதலாவதாக தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கிலும் ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நடிகை பூர்ணா ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அவர் இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை நதியாவும் த்ரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார். தனக்கு ஒப்ப்னை செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இச்செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே திரிஷ்யம் படத்தில் நடித்திருந்த கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் நதியா நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.