Home /News /entertainment /

கிறிஸ்துவ மத போதகராக மாறிய 90களின் கனவுக்கன்னி நடிகை மோகினி!

கிறிஸ்துவ மத போதகராக மாறிய 90களின் கனவுக்கன்னி நடிகை மோகினி!

நடிகை மோகினி

நடிகை மோகினி

தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மோகினி. 90களின் காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார். இவருக்கு நீல நிற கண் என்பதால் பூனை கண்ணழகி எனவும் அழைக்கப்பட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் இப்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார்.

    தமிழ், மலையாளம், மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மோகினி நடித்துள்ளார்.1976 ஆம் ஆண்டு தமிழ் பிராமண குடும்பத்தில் மகாலட்சுமி என்ற பெயருடன் பிறந்தவர் சினிமாவில் மோகினியாக அறிமுகம் செய்யப்பட்டார். 1991 ஆம் ஆண்டு டான்சர் படத்தில் அக்சய் குமாருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் சென்றார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.மோகினி நடிப்பில் தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

    வில்லனாக களம் இறங்கும் காமெடி நடிகர் மதன் பாப்!

    வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர், , சன் தொலைக்காட்சியில் காதல் பகடை, ராஜராஜேஸ்வரி , ஒரு பெண்ணின் கதை போன்ற சீரியல்களில் நடித்தார். “கதனார் கடம்பத்து கதனார்” என்கிற மலையாளத் தொடரிலும் மோகினி நடித்துள்ளார்.பின்பு பரத் என்பவரை மணந்துகொண்டு, அமெரிக்காவில் குடியேறினார்.

    என்னால முடியல.. வாந்தி வருது.. ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்ட ஆங்கர் ஜாக்குலின்

    சினிமாவை விட்டு விலகியவர் தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். இந்த தகவலை பேட்டியின் மூலம் மோகினி உறுதி செய்துள்ளார். அதுமட்டுமில்லை இவர் கணவருடன் விவாகரத்து வாங்கி விட்டார். மோகினிக்கு ருத்ரகேஷ் என்ற மகனும் உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி