ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல மாடல் மற்று நடிகை தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் கடிதம் எழுதி வைத்து மரணம்

பிரபல மாடல் மற்று நடிகை தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் கடிதம் எழுதி வைத்து மரணம்

தற்கொலை செய்துகொண்ட நடிகை அகான்ஷா மோகன்

தற்கொலை செய்துகொண்ட நடிகை அகான்ஷா மோகன்

நடிகை தற்கொலை செய்துகொண்ட அறையில் இருந்து நடிகை எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மும்பையில் மாடல் அழகியும், சினிமா நடிகையுமான அகான்ஷா மோகன் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மும்பையில் திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அகான்ஷா மோகன் மாடலிங் துறையில் பணியாற்றியதுடன் சில விளம்பரங்களில் நடித்து வந்தார் .இவர் கடந்த 16-ம் தேதி வெளியான 'சியா' என்ற படத்தில் நடித்துள்ளார். மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில், திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அகான்ஷா மோகன்.

  கடந்த புதன் கிழமை மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் மதியம் ஒரு மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார். இரவு எட்டு மணியளவில் அகான்ஷா ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் ஹோட்டல் பணியாளர் அறையின் மணியை பலமுறை அடித்தும் கதவு திறக்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த பணியாளர் இந்த தகவலை ஹோட்டல் மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.

  அவர் உடனடியாக இந்தத் தகவலை வெர்சோவா போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்தபோலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நடிகை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவ இடத்தில் இருந்து  கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில், 'மன்னிக்கவும், நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை.,எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க: நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் அதிரடி நீக்கம்! காரணம் என்ன?..

  உயிரிழந்த நடிகை மும்பையில் லோகண்ட்வாலா பகுதியில் உள்ள யமுனா நகர் சொசைட்டியில் வசித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த நடிகை அகான்ஷா எம்பிஏ படித்துள்ளார். உடற்பயிற்சியில் தனிக்கவனம் செலுத்தி வந்த இவர், சமூக ஊடகங்களில் தனது உடற்பயிற்சி மற்றும் டயட் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

  நடனத்தில் விருப்பம் கொண்ட இவர், மேடை நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். திரைப்படங்களில் தோன்றி படிபடியாக வளர்ந்து வந்த நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Actress, Crime News, Mumbai