Miya George: குழந்தை பிறப்பை அறிவித்த மியா ஜார்ஜ் - குவியும் வாழ்த்துகள்!

குழந்தையுடன் மியா

ஆர்யா தயாரித்த ’அமரகாவியம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.

  • Share this:
    நடிகை மியா தனக்குக் குழந்தை பிறந்த விஷயத்தை, ஃபோட்டோவுடன் வெளியுலகிற்கு அறிவித்துள்ளார்.

    ஆர்யா தயாரித்த ’அமரகாவியம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’, ’வெற்றிவேல்’, ’ஒரு நாள் கூத்து’, ’எமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார் மியா.

    தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தான் கர்ப்பமான விஷயத்தையோ அது சம்மந்தமான படங்களையோ இதுவரை சமூக வலைதளங்களில் பகிராமல் இருந்த மியா தற்போது குழந்தையுடன், தானும் தனது கணவரும் இருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by miya (@meet_miya)






    அதில், ‘இது ஆண் குழந்தை’ என்றும், ‘லூகா ஜோசப்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மியாவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: