சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக மன்னிப்பு கேட்ட மிருணாளினி!

படத்தில் நான் நடித்த பகுதி பிடிக்காதவர்கள் மன்னிக்கவும் - மிருணாளினி

news18
Updated: March 31, 2019, 12:35 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக மன்னிப்பு கேட்ட மிருணாளினி!
மிருணாளினி
news18
Updated: March 31, 2019, 12:35 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தில் என்னுடைய பகுதி பிடிக்காதவர்கள் மன்னிக்கவும் என்று அறிமுக நடிகை மிருணாளினி கூறியுள்ளார்.

ஆரண்ய காண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தணிக்கையில் 'A' சான்றிதழ் பெற்றிருக்கும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் படத்தைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.இந்தப் படத்தில் டிக் டாக், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான மிருணாளினி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், “சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனது சிறிய பங்குக்காக நான் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறேன். மக்களுக்கு நன்றி. நான் திரையில் இருக்க நீங்கள் தான் காரணம். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நான் நடித்த பகுதி பிடிக்காதவர்கள் மன்னிக்கவும். அடுத்த முறை எனது பணியை இன்னும் சிறப்பாக செய்கிறேன்” என்று கூறியுள்ளார். 

சூப்பர் டீலக்ஸ்..! இயற்கையின் முரணை அலசும் ஜனரஞ்சக சினிமா - வீடியோ

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...