நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
மீரா மிதுன்
பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
பின் அவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருவருக்கும் எதிரான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனால் ஜாமீன் கோரி மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மீராமிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.