எல்லை மீறும் மீராமிதுன்: சாதிப் பேரைச் சொல்லி இழிவான பேச்சு - நடவடிக்கை எடுக்குமா காவல்துறை

Youtube Video

அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்பி வரும் நடிகை மீராமிதுன் தற்போது தமிழ் திரையுலகின் இயக்குனர்களை சாதிய ரீதியாக திட்டி பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 • Share this:
  2016-ம் ஆண்டு, 'ஃபெமினா மிஸ் இந்தியா' சார்பாக நடத்தப்பட்ட அழகிப் போட்டியில், மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் மீரா மிதுன். ஆறு அழகி பட்டங்களை வென்ற அவர், சில சினிமாக்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். அவர் நடத்த திட்டமிட்ட "மிஸ் தமிழ்நாடு திவா" அழகி போட்டியில் முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாதால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

  இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மீரா தன்னை பிரபலப்படுத்தவும் , சமூக வலைத்தளத்தில் தனக்கான ஆர்மியை உருவாக்கவும் பணம் கொடுத்து மோசடியில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது.

  இதற்கிடையில் நடிகர் விஜய், நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர்களை பற்றி ஆபாசமாக பேச தொடங்கினார். ஊடகங்களின் கவனத்தை தன் மீது திருப்ப அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்தார். ஊடகங்களின் கவனத்தை தன் மீது திருப்புவதன் மூலம் லைம் லைட்டிலேயே இருக்க ஆசைப்படுகிறாரோ என்ற வகையில் அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

  இந்த நிலையில், சில பிரபல இயக்குநர்கள், தனது படத்தை மார்பிங் செய்து படங்களில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு பேசும் நடிகை மீராமிதுன், அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்றும் காட்டமாகப் பேசியுள்ளார்.

  தொடர்ந்து சமூகத்தின் பெயரை குறித்தே பேசியவர் அந்த சமூகத்தை சார்ந்த அனைத்து திரைப்பட இயக்குநர்களும் திரை துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சாடியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏற்கனவே நான்கு வழக்குகளில் சிக்கியுள்ள மீராமிதுன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவரது இந்த ஜாதிய ரீதியிலான பேச்சு, புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Karthick S
  First published: