நடிகை மீனா தான் கர்ப்பமாக இருப்பது போன்றதொரு ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி ஹீரோயினாக ஜொலித்தவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் அவருக்கே ஜோடியாகுமளவிற்கு வளர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பல தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல பிளாக்பஸ்டர் படத்தில் நடித்துள்ளார் மீனா. 90-களின் துவக்கத்தில் இருந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். நடிகை மீனாவிற்கு கண்ணழகி என்ற செல்லப்பெயரும் உண்டு.
நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரூ.200 கோடி வசூலை கடந்த பீஸ்ட்?
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான தோற்றத்தில் இருக்கும் மீனா, “எவ்வளவு மாறிவிட்டது. இந்த கெட் அப் அணிவது அப்போது எளிதாக இருந்தது. அதை மறைப்பதற்காக எப்போதும் கனமான புடவைகளை அணிவது வழக்கம். ஆனால் இப்போது தோற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இயற்கையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக சிஃபான் புடவைகள் கூட அணியலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.