ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘அஜித்தின் வாலி, விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ் படங்களில் நான் நடிக்க வேண்டியது… ஆனால்…’ – மீனா பகிர்ந்த மெமரிஸ்…

‘அஜித்தின் வாலி, விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ் படங்களில் நான் நடிக்க வேண்டியது… ஆனால்…’ – மீனா பகிர்ந்த மெமரிஸ்…

நடிகை மீனா

நடிகை மீனா

நாம் நடித்துக் கொண்டிருக்கும்போது இந்த படம் ஹிட்டாகும், இந்த படம் சரியாக போகாது என்பதை யாராலும் முடிவு செய்ய முடியாது. – மீனா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித்தின் வாலி, விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ் படங்களில்தான் நடிக்க இருந்ததாக கூறியுள்ள நடிகை மீனா, எதற்காக இந்த படங்களில் இடம்பெறவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ரிதமும் ஒன்று. இதன் இரண்டாம் பாகத்தை பண்ணினால் நன்றாக இருக்கும். நிறைய படங்களின் பாடல்களுக்கு, மிகவும் கஷ்டப்பட்டு நடன காட்சிகளை அமைத்து இருந்தோம். முத்து படத்தில் இடம்பெற்ற 'தில்லானா தில்லானா...' என்ற பாடலுக்கு ஈஸியான ஸ்டெப்தான் இருக்கும். ஆனால் அந்த பாடல் மெகா ஹிட்டானது.

நாங்கள் கஷ்டப்பட்டு ஆடிய பாடல்களுக்கு, கிடைக்காத வரவேற்பு இந்த பாடலுக்கு கிடைத்தது. இதுதான் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டபுள்ஸ் படத்திற்காக நானும், சங்கீதாவும் இணைந்து ஒரு பாடலில் ஆடி இருப்போம். அதன் பின்னணி இசையை ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும் என்று பிரபுதேவா கூறியிருந்தார்.

பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு vs விஜய்யின் வாரிசு? தியேட்டர் ஓனர்ஸ் ப்ளான் இதுவா?

இதற்காக நாங்கள் விடியவிடிய பயிற்சி மேற்கொண்டோம். மறுநாள் ஷூட்டிங்கின்போது ஆடை பிரச்சினை காரணமாக என்னால் சரியாக நடனமாட முடியவில்லை. பின்னர் எந்த அளவுக்கு என்னால் முடியுமோ, அந்த அளவிற்கு ஆடி பாடலை அமைத்தோம். தியேட்டரில் பார்க்கும்போது இந்த பாடல் மிகவும் சூப்பராக இருந்தது.

கால்ஷீட் காரணமாக உச்ச நடிகர்களுடன் படங்களை பண்ண முடியாமல் போனது. அஜித்துடன் வாலி நான் பண்ண வேண்டியது. ஆனால் தேதி பிரச்னை காரணமாக இந்த படம் மிஸ் ஆனது. தென்னிந்தியாவில் எல்லா மொழிகளிலும் நான் படம் பண்ணியதால், முக்கியமான படங்களில் என்னால் இடம் பெற முடியவில்லை.

ஜவான் படத்துக்கு 20 நாட்கள் ஷூட்டிங் பேலன்ஸ்.. ராஜஸ்தான் செல்லும் நயன்தாரா!?

நாம் நடித்துக் கொண்டிருக்கும்போது இந்த படம் ஹிட்டாகும் ; இந்த படம் சரியாக போகாது என்பதை யாராலும் முடிவு செய்ய முடியாது. எந்த படத்தில் நாம் இடம்பெற்றாலும் நம்முடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். பிரண்ட்ஸ் படத்தின் மலையாள வெர்ஷனை நான்தான் பண்ணி இருந்தேன். தமிழில் விஜய் உடன் நடிப்பதாக இருந்தது. ஆனால் தேதி பிரச்சனை காரணமாக எனக்கு வாய்ப்பு அமையவில்லை.

இவ்வாறு மீனா தெரிவித்தார்.

First published:

Tags: Actress meena