முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Actress Meena: வதந்தி பரப்பாமல் அனுதாபம் கொள்ளுங்கள் - கணவர் மறைவு குறித்து நடிகை மீனா உருக்கம்!

Actress Meena: வதந்தி பரப்பாமல் அனுதாபம் கொள்ளுங்கள் - கணவர் மறைவு குறித்து நடிகை மீனா உருக்கம்!

மீனா அறிக்கை

மீனா அறிக்கை

Actress Meena Husband Death: இந்த கடினமான தருணத்தில் எங்கள் குடும்பத்திற்கு உதவி புரிந்து உடன் நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Last Updated :

தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை மீனா இன்ஸ்டகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த தனது கணவர் வித்யாசாகரை சில தினங்களுக்கு முன்பு இழந்தார் நடிகை மீனா. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், கடந்த ஜூன் 27, 2022-ம் தேதி இரவு 7 மணியளவில் காலமானார். இதையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மீனாவுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் தனது கணவரின் மறைவு குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் மீனா. இது குறித்து சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "எனது அன்பு கணவர் வித்யாசாகரின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்த சூழ்நிலையில் அனுதாபம் கொள்ளுமாறு அனைத்து ஊடகங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தவறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள்.

அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்
 
View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கடினமான தருணத்தில் எங்கள் குடும்பத்திற்கு உதவி புரிந்து உடன் நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த மருத்துவக் குழுவினருக்கும், நமது முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும், பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actress meena, Tamil Cinema