ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமாவுக்கு 28ம் தேதி திருமணம்.. உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமாவுக்கு 28ம் தேதி திருமணம்.. உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு

நடிகர் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா

நடிகர் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா

ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கும் வருகின்ற 28ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். திருமணதுக்கு பின்பு நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரை பிரபலங்களை அழைத்து உள்ளனர்.

  கவுதம் கார்த்திக்- மஞ்சிமா ஜோடி தனது காதலை உலகிற்கு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தனர். நடிகர் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா  தங்களது காதலை வெளிப்படுத்தி சோஷியல் மீடியாவில் பதிவிட, அதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

  முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தின்போது கவுதமுக்கும், அதில் நடித்த மஞ்சிமா மோகனுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டு, பின்னாளில் காதலாக வளர்ந்துள்ளது.

  தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். அஜித் - ஷாலினி , சூர்யா – ஜோதிகா, நயன்தாரா – விக்னேஷ் சிவன் என இந்த பட்டியல் சென்று கொண்டே இருக்கும்.

  Gautham Karthik Manjima Mohan relationship announcement, Gautham Karthik Manjima Mohan love announcement, கெளதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் காதல், Gautham Karthik and Manjima Mohan all set to get married soon, Gautham Karthik Manjima Mohan, Gautham Karthik Manjima Mohan love, Gautham Karthik Manjima Mohan wedding, Gautham Karthik Manjima Mohan marriage, Gautham Karthik Manjima Mohan marriage date, gautham karthik songs, gautham karthik tamil movies, gautham karthik birthday, gautham karthik twitter, gautham karthik age, gautham karthik instagram, manjima mohan wiki, manjima mohan movies in tamil, manjima mohan latest movie, manjima mohan instagram, manjima mohan photos latest, manjima mohan accident, manjima mohan born, manjima mohan childhood photos, கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன், கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் காதல், கவுதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம், கவுதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமண தேதி,

  Varisu : விஜய்யின் வாரிசு பட டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா? வைரலாகும் புதிய தகவல்

  சோஷியல் மீடியாவில் கவுதமும், மஞ்சிமாவும் தங்களது காதலை அறிவித்துள்ளனர். இதுபற்றி மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘3 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னை முழுவதும் இழந்திருந்தபோது காக்கும் தேவதையாக நீ வந்தாய். என் எண்ணத்தை மாற்றி நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர வைத்தாய். பிரச்னைகளை ஏற்றுக் கொண்டு நான் நானாக இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்தவன் நீ. எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் நீ இருப்பாய்’ என்று கவுதம் கார்த்திக்கை பார்த்து உருகியுள்ளார் மஞ்சிமா மோகன்.

  தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கார்த்திக் மகன் கவுதம் கார்த்தி  2013-இல் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். வை ராஜா வை, ரங்கூன், ஹரஹர மகா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் கவுதமுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன.




   




  View this post on Instagram





   

  A post shared by Manjima Mohan (@manjimamohan)



  இந்திய பயணத்திற்கு பிறகு தனது மகளுடன் மீண்டும் இணைந்த நடிகை பிரியங்கா சோப்ரா!

  தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் மஞ்சிமா மோகனுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Gautham karthik